சென்னை:

காராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்டும் வகையில், முதல்வர் பட்னாவிஸ் சட்டமன்றத்தில் நாளை மாலை 5 மணிக்கு  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிசும், துணைமுதல்வர் பதவியில் இருந்து அஜித் பாவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ஸ்டாலின்

இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என்று  திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

கே.எஸ்.அழகிரி:

“மகாராஷ்டிராவில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். குடியரசுத் தலைவர், ஆளுநர் முறையாக செய்யாததை உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. இந்தத் தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படவேண்டும். அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கூறியிருப்பது வரவேற்புக்குரியது. உள்ளாட்சித் தேர்தல் நேரடி தேர்தலாக நடத்தப்பட வேண்டும்.

அஜித் பவார் மீதான 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மோடிக்கு வாக்களித்தவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.