நிர்பயா வழக்கில் 9ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு

டில்லி:

டில்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளி ராம்சிங் சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.

மீதமுள்ள முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்த டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வரும் 9-ம்தேதி இதில் தீர்ப்பு அளிக்கவுள்ளது.