ஒடிடியில் படம் ரிலீஸ் செய்யும் சூர்யா முடிவு தவறானது.. தியேட்டர் சங்க நிர்வாகி புகார்..

சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம் வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இதனை சூர்யா நேற்று அறிவித்தார்.


ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண் குயின் மற்றும் டேனி, காக்டெயில் ஆகிய படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆகின.
சூர்யா படம் ஒடிடியில் வெளியாவது குறித்து தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ’பட தயாரிப்பாளர்கள் கொரோனா பாதிப்பால் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். கடும் நெருக்கடி சூழலில் சினிமா துறை இருக்கிறது. இந்நிலையில் தியேட்டர் உரிமைகளை கவனத்தில் கொள்ளாமல் சூர்யா தனது படத்தை ஒடிடியில் வெளியிட எடுத்துள்ள முடிவு தியேட்டர் களை நிரந்தரமாக மூடுவதற்கான வழி வகுக்கும். அவர் வளர்ச்சிக்கு தியேட்டர் கள் ஏணியாக இருந்தது. அதை அவர் கீழே தள்ளிவிட்டுவிட்டார்’ என்றார்.
முன்னதாக சில வாரங்களுக்கு முன் சூர்யா கூறும்போது,’சூரரைப் போற்று படம் தியேட்டர் வெளியீட்டுக் காக காத்திருக் கிறது. பிரமாண்ட திரையில் காண நானும் காத்திருக்கிறேன்’ என்றார். ஆனால் தியேட்டர் திறப்புக்கான அறிகுறி இல்லாத நிலையில் இப்படம் ஒடிடி தள ரிலீசுக்கு சென்றிருக்கிறது.