சூரத்:

நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள புல்வாமா பயங்கரவாத குண்டு வெடிப்பில், பலியான வீரர்களின்  குடும்பங்களுக்கு சூரத் தொழிலதிபர் ஒருவ்ர ரூ.11 லட்சம் நன்கொடை அளிப்பதாக அறிவித்து உள்ளார். தனது மகளின் திருமண விருந்தையும் ரத்து செய்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புல்வாமா தற்கொலை பயங்கரவாதி தாக்குதலில் 2 தமிழர்கள் உள்பட 44 பேர் பலியானார்க. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று முன்தினம் (14ந்தேதி) மாலை  சென்று கொண் டிருந்தனர். ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புலவாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த தற்கொலை படை பயங்கரவாதி  குண்டு நிரப்பிய காருடன் வந்து மோதி வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த கொடூர வெடிவிபத்தில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும்,  20 வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  சூரத்தை சேர்ந்த வைரத்தொழில் செய்து தொழிலதிபர் தேவாஷி மானெக் (Dewashi Manek) என்பவர் தனது மகள் எமியின் திருமண விருந்தை ரத்து செய்து அந்த  பணத்தை பயங்கர வாத தாக்குதலில் உயிர்நீதி வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுத்துள்ளார்.

நேற்று அவரது மகள் எமியின் மகள் திருமணம் நடைபெற்றது. அதில் நடைபெற இருந்த விருந்தை ரத்து செய்துள்ள தேவாஷி,  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 11 லட்ச ரூபாயும் சேவை ஊழியர்களுக்கு ரூ .5 லட்சமும் நன்கொடை அளித்துள்ளார்.