குஜராத்தில் பெண் ஊழியர்களை ஆடைகளின்றி நிற்க வைத்து மருத்துவ பரிசோதனை: வெடித்தது சர்ச்சை

சூரத்: குஜராத் மாநிலத்தில் மாநகராட்சி பெண் ஊழியர்களை மருத்துவ பரிசோதனைக்காக ஆடைகளின்றி நிற்க வைத்ததாக பரபரப்பு குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள சூரத் மாநகராட்சியில் பயிற்சி அலுவலர்களாக பணியாற்றும் 100 ஊழியர்கள் கட்டாய மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சென்று இருக்கின்றனர்.

அவர்களை ஊழியர்கள் அங்குள்ள ஒரு அறையில் ஆடைகளின்றி நீண்ட நேரம் காக்க வைத்து இருக்கின்றனர். அதன்பின்னர் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரித்துள்ளனர்.

வெளியில் இருந்து யாரும் பார்க்காமல் இருப்பதற்காக ஒரே ஒரு திரை மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. திருமணமாத பெண் ஊழியர்களிடம் மருத்துவர்கள் அருவருக்கத்தக்க கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் மாநகராட்சி ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். பெண் ஊழியர்கள் புகாரை தொடர்ந்து இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் ஊழியர்களுக்கு கண், காது, தொண்டை, இதயம் மற்றும் நுரையீரல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.