மோடி அரசின் அவலம்: அடுத்த காலாண்டிற்குள் 1 லட்சம் வைர தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

அகமதாபாத்:

மோடி அரசின் நிர்வாக சீர்கேடு காரணமாக நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பல தொழிலாளர்கள் தற்கொலையை நாடியுள்ளனர்.

இந்த நிலையில், வைரத்தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் அடுத்த காலாண்டிற்குள் சுமார் 1 லட்சம்  பேர் வரை வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றது முதல் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனை, ஜிஎஸ்டி என மக்கள் விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் சிறு தொழில்கள் அடியோடு பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழந்து வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய வைரம் பட்டை தீட்டுதல் மற்றும் தேவையான அளவுக்கு கட் செய்து மாற்றி அமைத்தல் மற்றும் பாலீஷ் செய்வது போன்ற வேலைகள் சூரத் நகரத்தில் நடைபெற்று வருகிறது. மத்தியஅரசின் வரி காரணமாக  ஜராத் மாநிலத்தில் நடைபெற்று வைரக் கற்கள் தொடர்பான தொழில் முடங்கி உள்ளது. இந்த நிலையில், அடுத்த காலாண்டிற்குள் சுமார் 1 லட்சம் வைர தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

வைரங்களுக்கு பட்டை தீட்டுதல் மற்றும் பாலீஷ் போடுதல் போன்ற தொழில்களில் லட்சக்கணக்கான பேர் ஈடுபட்டு வரும் நிலையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்களுக்கு வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக வைரத்தின் விலை அதிகரித்து, விற்பனை முடங்கி உள்ளது.

மத்திய அரசின் இந்த நிர்வாக  சீர்கேடு காரணமாக சூரத்தில் வைரத்தொழில் முடங்கி உள்ளது. இதன் காரணமாக சுமார் 7 லட்சம்பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

கடந்த செப்டம்பார் நடப்பு கணக்கின்படி, பற்றாக்குறையை சமாளிக்கும் முயற்சியாக மத்திய அரசு வைர கற்கள் உள்பட பல பொருட்களின் மீதான  இறக்குமதி வரிகளை உயர்த்தியது. மேலும் பட்டை தீட்டப்படும் மற்றும் பாலீஷ் செய்யப்படும் கற்களின் வரியும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக  வைரங்களின் விலை அதிகரித்து, ரூபாய் மதிப்பு குறைந்துவிட்டது.

இந்த தாக்கம்  கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், 31.83 சதவீதமாக குறைந்த நிலையில்,  5,289.35 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டு இதே காலத்தில், 7,759.48 கோடி ரூபாயாக இருந்தது என்பதை வைர வியாபாரி சங்க துணைத்தலைவர் கொலின் ஷா தெரிவித்துஉள்ளார்.

இதே நிலை நீடித்தால், அடுத்த இரண்டு காலாண்டில் ஒரு லட்சம்  தொழிலாளர்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்றும் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களின் கடன் சுமை அதிகரிக்கும் என்றும் கூறி உள்ளார். மேலும், வரி உயர்வு காரணமாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட  வணிகம் நலிவடைந்து உள்ளதாகவும் மோடியின் பணமதிப்பு போன்ற காரணங்களால் பெரும்  இழப்புகளை  சந்திக்க நேரிடுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும வைர வியாபாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர், தொழில்துறை மதிப்பீடுகளின்படி, இந்த துறையில் 5 பேரில் ஒருவர் அடுத்த ஆறு மாதங்களில் வேலையை இழக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.