உலகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ‘திருப்பூர், திருச்சி, சென்னை:’ முதலிடத்தில் சூரத்! ஆய்வில் தகவல்

லகின் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த  ‘சூரத்’ முதலிடம் வகிப்பதாக  ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

2018 முதல் 2035-ம் ஆண்டு வரை அதிக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முதல் 20 நகரப் பட்டியலில், சூரத் உள்பட தமிழகத்தில் திருச்சி, திருப்பூர், சென்னை ஆகிய நகரங்களும் இடம் பிடித்துள்ளன.

இந்த தகவலை  ஆக்ஸ்ஃபோர்ட் பொருளியல் துறை ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.

பிரபலமான  ஆக்ஸ்ஃபோர்ட் பொருளியல் துறை சார்பில், உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படை யில், ஆண்டுதோறும் உலகளாவிய நகரங்களின் ஆய்வுப் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் தற்போது வெளியான பட்டியலில் சூரத் முதலிடத்தை பிடித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு வெளியிட்டுள்ள பட்டியலின்படி,  2018ம் ஆண்டு முதல்  முதல் 2035-ம் ஆண்டு வரை  ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி அதிவேகமாக வளர்ந்து  நகரங்களில் இந்தியாவை சேர்ந்த 20 நகரங்களில், தமிழகத்தை சேர்ந்த திருப்பூர், திருச்சி, சென்னை போன்ற நகரங்களும் இடம்பிடித்துள்ளன.

குஜராத் மாநிலத்தில் ஜவுளிகள் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற நகரமான சூரத் முதலிடத்தை பெற்றுள்ளது. அதன் ஜிடிபி வளர்ச்சி  9.17 சதவிகிதம். அதைத் தொடர்ந்து, ஆக்ரா, பெங்களூரு, ஐதராபாத், நாக்பூர் அடுத்த 4 இடங்களை பிடித்துள்ளன.

இந்த பட்டியலில், தமிழகத்தில் திருப்பூர் 6வது இடத்தில் உள்ளது. இதன்  சராசரி ஆண்டு ஜி.டி.பி. 8.36% ஆக இருக்கும் என கணித்துள்ளது. அதைத்தொடர்ந்து,  திருச்சி 8வது இடத்தை பிடித்துள்ளது. அதன் ஜிடிபி வளர்ச்சி 8.29% இருக்கும் என்றும், 9வது இடத்தில் சென்னை இடம் பிடித்துஉள்ளது. இதன்  ஜி.டி.பி 8.17%  ஆக உயர்வும் என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாகப் பொருளாதார வளர்ச்சி அடையும் நகரங்கள் பட்டியலில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு, இந்திய நகரங்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

2035-ம் ஆண்டு உலகளவில் வேகமாக பொருளதார வளர்ச்சி அடைந்து இருக்க கூடிய டாப் 10 பட்டியலில் 4 சீன நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜிடிபி தரவுகளை வைத்து இந்தப் பட்டியலை ஆக்ஸ்ஃபோர்டு பொருளாதார குழு கணித்து பட்டியலை வெளியிட்டு உள்ளது.