சூரத்: குஜராத் மாநிலத்தின் வணிகத் தலைநகரான சூரத்தின் முக்கிய கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஹரேஷ் சாவ்ஜி ரவானி தற்கொலை செய்துகொண்டதாக வெளியான தகவல் அம்மாநில கட்டுமான தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

46 வயதான ஹரேஷ், தான் வார இறுதியில் சென்று தங்கும் கம்ரேஜ் இல்லத்தில் தூக்கில் தொங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவானி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிட்., என்ற முன்னணி கட்டுமான நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார். அவர் தூக்கிட்டுக் கொண்டதற்கான உண்மையான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றாலும், அவர் கடந்த 2 மாதங்களாக தீவிர அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன்பொருட்டு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பல பெரிய வாழிட அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் பல வணிக கட்டுமான திட்டங்களையும் செய்துமுடித்து நகரின் முன்னணி கட்டுமான நிறுவனமாக திகழ்கிறது ஹரேஷின் நிறுவனம். சூரத்தின் முதல் 5 முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாக இவரின் நிறுவனம் மதிப்பிடப்பட்டிருந்தது.

இவருக்கு ரேகா என்ற மனைவியும், 19 மற்றும் 17 வயதுகளில் இரண்டு மகன்களும் உள்ளனர்.