நேற்று பிக்பாஸ் வீட்டில் ஜோடி டான்ஸ் மற்றும் பந்தை பவுலுக்குள் போடும் டாஸ்க் நிகழ்ந்தது.
இந்த நிலையில் டாஸ்க்கின் போது ஏன் பாலாஜியை வெளியே அனுப்பினேன் என்பதற்கு ஷிவானி விளக்கம் அளித்தார். அப்போது அடுத்த வாரம் தான் கண்டிப்பாக பாலாஜியை நாமினேட் செய்வேன் என தெரிவித்தார்.
 
அதே நேரம் பாலாஜி-கேப்ரியலா இடையே ஒரு நட்பு உருவாகி இருக்கிறது. ஆஜித், பாலாஜி, கேப்ரியலா மூவரும் அமர்ந்து மற்றவர்களை கிண்டலடித்து மகிழ்கின்றனர். ஷிவானியை தோழியாக கருதும் கேப்ரியலாவும் ஷிவானிக்கு சப்போர்ட் செய்யாமல் அவருடன் சேர்ந்து சிரிக்கிறார்.
சின்ன மச்சான் பாடலுக்கு அனிதா-சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்து ஆடினர். வயதில் பெரியவராக இருந்தாலும் இளைஞர்களுக்கு ஈடு கொடுத்து பிக்பாஸை அசால்ட்டாக டீல் செய்து வரும் சுரேஷ் டான்ஸிலும் கலக்கி விட்டார்.
திடீரென அனிதா, சனம் ஷெட்டியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார் போல. இதையடுத்து அவரிடம் ஏன் என்னிடம் பேசாமல் அவாய்ட் செய்கிறீர்கள்? என சனம் கேட்க, பதிலுக்கு அனிதா அதெல்லாம் ஒண்ணும் இல்ல என விலகி,விலகி செல்கிறார்.
நேற்று ஒரு டாஸ்கில் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி-வேல்முருகன் ஜோடி வெற்றிபெற்றது, டாஸ்க்கில் வெற்றி பெற்றதும் சனமை, வேல்முருகன் கட்டிப்பிடித்தது கொஞ்சம் ஓவராக இருந்தது. இதையடுத்து வேல்முருகன், சனம் ஷெட்டி இருவரையும் அடுத்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது என்னும் வரத்தினை பிக்பாஸ் அருளினார்.