தோசைக்கு மாவு தான் அரைக்கனும், ஆனா அர்ச்… ஆளையே அரைக்குது” : சுரேஷ் சக்ரவர்த்தி

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார்.

வெளிவந்த அவர் பிக்பாஸ் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதல்முறையாக மறைமுக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“கையில கரண்டி வெச்சி இருக்கவங்க எல்லாம் அன்னபூரணி ஆக முடியாது. தோசைக்கு மாவு தான் அரைக்கனும், ஆனா அர்ச்… ஆளையே அரைக்குது” என்று பதிவிட்டுள்ளார்.