“அவங்க உக்கிர காளி இல்ல ஆனா வக்ரகாளி” என கூறும் சுரேஷ் சக்கரவர்த்தி….!

கடந்த வாரம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அர்ச்சனா மற்றும் ஆஜீத்திற்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கிறது என்ற தகவல் வைரலானது.

இந்நிலையில் இதுபற்றி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் தளத்தில் கூறும்போது “உக்கிர காளி இல்லை இது வக்ரகாளி. ஆம் கேப்டனாக தான் வெளியேறுகிறார் ஆனால் அன்பு கேங்கின் கேப்டனாக. ஆம் அவர் இந்த விளையாட்டை தனக்கானதாக மாற்றி கொண்டார். இனிமேலாவது நீங்களும் உங்களுடைய விளையாட்டை உங்களுடையதாக மாற்றி கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.