சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் ‘மாநாடு’. இதில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படக்குழு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிம்பு படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

ஆனால் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர், சிம்பு படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தயராகவே இருந்தார். சுரேஷ் காமாட்சிக்கு தான் பைனான்ஸ் பிரச்சினை என கூறினார்.

பின்பு பேச்சுவார்த்தை நடந்ததில் சிம்பு தரப்பில் அவரது அம்மா உஷா ராஜேந்திர் பஞ்சாயத்தில் பேசியதோடு, இறுதியாக ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பார் என்றும், ஆனால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தான் படப்பிடிப்பில் இருப்பார், என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு சுரேஷ் காமாட்சியும் ஒப்புக்கொண்டதாக தகவலும் வெளியானது .

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ‘மாநாடு’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் சிம்பு .

சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஹைதராபாத் விரைவதாக இருந்தனர் படக்குழுவினர்.

இதனிடையே கொரோனா லாஃடவுனில் படம் தடைபட்டது .

இந்நிலையில் மாநாடு திரைப்படம் நிறுத்தம் என நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டதால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோபமடைந்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், இனிமேல் இதுபோன்ற செய்திகள் வெளியானால் அவ்வளவு தான். மீடியா மற்றும் அதன் சார்ந்து இருக்கும் குழுவை எப்போதும் மதிக்கின்றவன் நான். படம் நிறுத்தம் என்று எந்த ஒரு ஸ்டேட்மென்ட்டும் நான் தரவில்லை. அப்படியிருக்க படக்குழுவினரை கேட்காமல், விசாரிக்காமல் நீங்கள் எப்படி இந்த மாதிரி செய்தியை வெளியிடலாம் ? மாநாடு திரைப்படத்தை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை. உங்களது டேபிள் ஒர்க்கை நிறுத்துங்கள் என பதிவு செய்துள்ளார்.