டிஎன்பில் கிரிகெட் போட்டியில் விளையாடுகிறார் சுரேஷ் ரெய்னா!

சென்னை,

மிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில் விளையாட பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், சஞ்சு சாம்சன் ஆகியோர் பதிவு செய்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிஎன்பிஎல் போட்டி  ஜுலை 22ந்தேதியன்று தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் ஜுன் 23 அன்று  நடைபெறுகிறது.

இந்நிலையில், டிஎன்பிஎல் போட்டியில் விளையாட விரும்பும் வீரர்கள், அதற்கான விதிப்படி தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசனில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன்படி பல்வேறு வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த ஆண்டு  ரூபி காஞ்சி வாரியஸ் அணியின் பெயர் ரூபி திருச்சி வாரியர்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெற இருக்கும்  டிஎன்பிஎல் போட்டியில் பிரபல வீரர்கள் பலர் இடம்பெற வுள்ளனர். அதேபோல் முன்னாள் வீரர் கவுதம் டிஎன்பிஎல் அணியின் ஆலோசகராகப் பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் பிரபல வீரர்களான சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான் போன்றவர்களும் இந்த ஆண்டு களத்தில் குதிக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ரெய்னா, தற்போது  டிஎன்பிஎல்-லிலும் விளையாட முடிவு செய்திருப்பது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுகளை மீண்டும்  விசில் போட வைத்துள்ளது.

தமிழ்நாட்டு டிவிஷன் லீக் அணியான கிராண்ட் ஸ்லாமில் ரெய்னா இணைந்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் டிஎன்பிஎல் போட்டியில் விளையாடத் தகுதி பெறுகிறார்

இந்த வருட டிஎன்பில் போட்டிகளில், சுரெய் ரெய்னா, யூசுப் பதான், மனோஜ் திவாரி, உன்முக்த் சந்த், சஞ்சு சாம்சன், மனன் வோஹ்ரா, அசோக் டிண்டா, சந்தீப் சர்மா, சஹால், பியூஷ் சாவ்லா, பவன் நெகி, பசில் தம்பி, ராகுல் திருப்பதி என பிரபலமான ஐபிஎல் வீரர்கள்  ஏலத்தில் பங்குபெற தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர மற்ற மாநிலத்தைச் சேர்ந்த 88 வீரர்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.

இவர்களில் இருந்து 24 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள். டிஎன்பிஎல் விதிமுறை களின்படி ஒவ்வொரு அணியும் 3 வெளிமாநில வீரர்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அதில் இருவர் போட்டியில் விளையாடும் அணியில் இடம்பெறலாம்.

இதில் விளையாடும் வீரர்களுக்கு குறைந்தபட்ச  சம்பளம் 2.5 லட்சம் அதிக பட்சமாக 5 லட்சம் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.