நெட்டிசன்:
சமூக ஆர்வலர்  பாரதி சுப்பராயன் (Bharathi Subbarayan) அவர்களின் முகநூல் பதிவு:
ர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் கொடுங்கள் என்று கேஜரிவாலும் மற்ற சிலரும் கேட்டது மிகுந்த கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
என்னைப்பொறுத்த வரையில் ஆதாரம் கேட்டதில் எந்தவித தவறும் இல்லை.
ஆதாரம் கேட்பதற்கு முக்கிய காரணமே மோடி தான் என்பேன்.
மோடி பற்றி வேடிக்கையாக ஒரு கதை உண்டு.
“உன்னிடம் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது, மோடி, மேலும் பத்தாயிரம் தருகிறேன் என்கிறார், இப்பொழுது உன்னிடம் எவ்வளவு இருக்கும்?” என்று செந்திலை பார்த்து கேட்டான் ஆனந்தன்.
“பத்தாயிரம் தான் இருக்கும்” என்றான் செந்தில்.
“உனக்கு கணக்கு தெரியவில்லை என்று நினைக்கிறன்”
“எனக்கு கணக்கு தெரியும், உனக்கு தான் மோடியை தெரியவில்லை” என்றான் செந்தில்.
1
வெளிநாட்டில் இருக்கும் நகரங்களை படம் பிடித்து இது தான் குஜராத் என்று ஏமாற்றியது, கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் பதினைந்து லட்சம் கொடுப்பேன் என்று புளுகியது, அடிப்படை கட்டமைப்பில் எந்தவித மாற்றமும் செய்யாமல் தூய்மை இந்தியா திட்டம் என்று வெற்றுத்திட்டத்தை அறிவித்து தனக்கு விளமபரம் தேடிக்கொண்டது, இது போன்று பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விடும் நிகழ்வுகள் இந்த மோடி அரசாங்கத்தில் ஏராளம் நடந்து விட்டது. ஏதேச்சையாக ஒரு ரயில் சரியான நேரத்திற்கு வந்துவிட்டால் கூட அதற்கும் தான் தான் காரணம் என்று கூறி விளம்பரம் தேடும் விளம்பரப்பிரியராகவே மோடி அறியப்பட்டிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், MODI STRIKES BACK என்று மிகப்பெரிய விளம்பரத்தை சமூக ஊடகங்களில் சங் பரிவாரங்கள் செய்வதை பார்க்கும் போதும், உத்தரப்பிரதேசத்தில், இதை போஸ்டர் ஒட்டி வாக்குக் கேட்பதை பார்க்கும் போது சிந்திக்கும் யாவருக்கும் சந்தேகம் எழுவது இயல்பே.
மேலும் அடி வாங்கிய பாகிஸ்தானே அடிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறது. ஐநா சபை மற்றும் சர்வதேச ஊடகங்களும் இந்த தாக்குதலை மறுத்திருக்கிறது.
இவற்றை எல்லாம் பார்க்கும் பொது, உண்மையிலேயே தாக்குதல் நடந்ததா இல்லை எல்லையில் சாதாரணமாக நடந்த துப்பாக்கி சூட்டை பெரிதாக்கி வழக்கம் போல் தனக்கு விளம்பரம் தேடிக்கொண்டாரா மோடி என்ற சந்தேகம் சிந்திக்கும் யாவருக்கும் வருவதில் தவறொன்றும் இருப்பதாக எனக்குப் படவில்லை.
இதனிடையில், இப்பொழுது நடந்ததை போன்ற சர்ஜிக்கல் தாக்குதல்களை மூன்று முறை தங்கள் ஆட்சிக்காலத்தில் நடத்தியதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், ராணுவ ரகசியம் கருதியும் இதை நாங்கள் அறிவிக்கவில்லை என்கிறது. இதுவல்லவோ அக்கறை. இதுவல்லவோ மதியூகம்.
ராணுவம் நடத்திய ரகசியத் தாக்குதலை விளம்பரப்படுத்தியதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு அசச்சுறுத்தலையும், இரு நாட்டிற்கு இடையில் போர் பதட்டத்தையும் அதிகரித்திருக்கிறார் மோடி.
சங்கபரிவாரங்களின் தேசப்பற்று போல் எங்கள் தேசப்பற்று தேசிய கோடி மற்றும் தேசிய கீதம் போன்ற குறியீடு சார்ந்த போலி தேசப்பற்று அல்ல. மக்கள் தான் எங்களுக்கு தேசம். அவர்களின் பாதுகாப்பே எங்களின் கீதம்.
உங்களுக்கு உத்திரப்பிரதேச தேர்தலில் வெற்றி பெறுவதற்கோ சரிந்து கிடக்கும் உங்களின் ஊதி பெரிதாக்கப்பட்ட பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்கோ ஏராளமான வழிகள் இருக்கிறது. தயவு செய்து உங்கள் விளம்பர வெறிக்கு தேசப்பாதுகாப்பை பலியாக்காதீர்கள்.
நன்றி.