‘சூர்யா 40 ‘ திரைப்படத்தை அறிவித்த சன் பிக்சர்ஸ்…!

தீபாவளி அன்று OTT தளத்தில் வெளியாகவிருக்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’.

இந்நிலையில் சூர்யா 40 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

ஏற்கனவே சூர்யாவை பசங்க 2 படத்தில் இயக்கியிருப்பார். சூர்யாவுடன் இரண்டாவது முறையாக இணையும் இயக்குனர் பாண்டிராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.