’சூரரைப்போற்று’ படம் விற்ற லாபத்தில் ஒன்றரை கோடி ரூபாய் தந்த சூர்யா.. சிவகுமார், பாரதிராஜா, தாணு பங்கேற்பு..

சூரரைப் போற்று படத்தை ஒடிடியில் ரிலீஸ் செய்கிறார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இதற்கு தியேட்டர் அதிபர்கள். டைரக்டர் ஹரி எதிர்ப்பு தெரிவித்தனர். உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஹரி தெரிவித்தார். திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, சூர்யாவின் முடிவை பாராட்டி இருந்தார்.


முன்னதாக சூரரைப்போற்று பட விற்பனை லாபத்தில் 5 கோடி திரையுல சங்கங்களுக்கு பிரித்தளிக்கபடுமென்றார் சூர்யா . அதன் முதல் கட்டமாக ஒன்றை ரை கோடியை இன்று பகிர்ந்தளித்தார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு (பெப்ஸி) ரூ 80 லட்சம், இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 20 லட்சம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன் சிலுக்கு ரூ 30 லட்சம் மற்றும் நடிகர் சங்கத் திற்கு ரூ 20 லட்சம் வழங்கப் பட்டது.
நடிகர் மற்றும் சூர்யாவின் தந்தை சிவ குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் இயக்குனர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோர் பாரதி ராஜாவின் திரைப்பட நிறுவனத்தில் இந்த காசோலைகளை திரைப்பட அமைப்பு களுக்கு வழங்கினர். இயக்குனர் பாரதி ராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு மற்றும் சுரேஷ் காமாட்சி, நடிகர் நாசர், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
,