வெற்றிமாறன் இயக்கத்தில் தந்தை மகனாக நடிக்கிறார் சூர்யா..

டிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதமே வெளி யானது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கியபோது கொரோனா லாக் டவுனால் அதை தொடரவில்லை.


சூர்யா, வெற்றிமாறன் இணையும் படத் துக்கு வாடிவாசல் என்று பெயரிடப்பட விருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது இன்னும் இயக்குனர் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. மேலும் இப்படம் ஜல்லிக்கட்டு கதையாக உருவாகிறது. தந்தை, மகன் வேடத்தில் சூர்யாவே நடிக்க உள்ளார். வாடி வாசல் வழியாக துள்ளி குதித்து வரும் ஜல்லிக்கட்டு காளை அடக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க விருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். ஏற்கனவே தந்தை மகனாக 24, வாரணம் ஆயிரம் என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா.
சுதா கொங்கனாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூரரைப்போற்று படம் சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசுக்கு காத்திருக்கிறது.