டிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படம் வரும் அக்டோபர் 30 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கு சிங்கம் பட இயக்குனர் ஹரி எதிர்ப்பு தெரிவித்த துடன், ’தனது முடிவை சூர்யா மறுபரிசீ லனை செய்து படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும்’ என்று கூறினார்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் ’சூரரரைப் போற்று’ படத்தை 100 கோடிக்கு பிஸ்னஸ் செய்திருப்பதாக டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
சூர்யா நடித்து அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவர இருக்கும் ’சூரரைப்போற்று’ திரைப்படம் முன் வர்த்தகம் (Pre-Business) 100 கோடிக்கு மேல் நடந்துள்ளதாக சூர்யா ரசிகர்கள் தற்போது ஒரு ஹாஷ்டேக் #SooraraiPottruHits100crPB என்று கிரியேட் செய்து சமூகவலைதளத்தில் இந்திய அளவில் டிரெண்டிங் செய்து கொண்டிருக் கின்றார்கள்.