Random image

ஹரி இயக்கதில் சூர்யா நடிக்கும் ’அருவா’ படம் டிராப் ஆகிறது?

சிங்கம் முதல்பாகம் முதல் 3 பாகம் வரை சூர்யா இயக்குனர் ஹரி கூட்டணி வெளுத்து வாங்கியது அப்படங்கள் அவர்களுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. இதையடுத்து மீண்டும் அவர்கள் கூட்டணியில் எப்போது படம் வரும் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.


இந்நிலையில்தான் சூர்யா நடிக்கும் புதிய படமான அருவா படத்தை ஹரி இயக்க முடிவானது. ஹரி படம் என்றால் ஹூட்டிங் தொடங்கி அடுத்த ஒன்றரை மாதத்துக்குள் ஹுட்டிங்கை முடித்து விடுவார் அவ்வளவு வேகமாக அவரது படப் பிடிப்பு நடக்கும். இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கும் ’வாடி வாசல்’ படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டார். அதற்கான ப்ர்ஸ்ட் லுக் படம் வெளியானது.
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தொடங்கு வது பற்றி முடிவு செய்ய முடியாத நிலையில் இரு பட குழுவினரும் குழப்பத்தில் உள்ளனர். மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் பட்சத்தில் வாடி வாசல் படம் தான் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரி கிறது. இந்நிலையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க விருந்த படம் கைவிடப்பட்டதாக நெட்டில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. மேலும் வாடிவாசல் படம் முடிந்ததும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
வெற்றி மாறன், பாண்டிராஜ் படங்கள் தொடங்கி னால் அதன் படப்பிடிப்பு முடிய 2021ம் ஆண்டுகூட முடிவுக்கு வந்துவிடும். இதற்கிடை யில் ஹரி படம் தொடங்க வாய்ப்பில்லை. எனவே அப்படம் கைவிடப்படும் என்றே தெரிகிறது.