சூர்யாவுக்கு முதல் முறையாக இசையமைக்கிறார் இமான்…!

நடிகர் சூர்யாவின் 39-வது படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று அதிகாரபூர்வமாக நேற்று வெளியானது.

ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் இது .

நேற்று இயக்குனர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளராக டி இமான் , ஒளிப்பதிவாளராக வெற்றி , படத்தொகுப்பாளராக ரூபன் , சண்டை பயிற்சியாளராக திலிப் சுப்பராயன், கலை இயக்குனராக மிலன் பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு இமான் இசையமைப்பது இதுவே முதல் முறை. இயக்குனர் சிவாவின் முந்தைய படமான ‘விஸ்வாசம்’ படத்தின் தொழில்நுட்பக்குழு இப்படத்திலும் பணியாற்றுகின்றனர்.