இயல்புநிலை திரும்பிய பின்னரே ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு….!

இந்தியா முழுக்கவே கொரோனா அச்சுறுத்தல் என்பது இன்னும் குறையவில்லை.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

தொடர் ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதால் திரைப்பட படப்பிடிப்புகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரஜினிகாந்தின் அண்ணாத்த, அஜித்தின் வலிமை உள்ளிட்ட பெரிய படங்களின் ஷூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இயல்புநிலை திரும்பிய பின்னரே படப்பிடிப்பை தொடங்க ரஜினி,அஜித் உள்ளிட்டோர் முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக படத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர்கள் எடுத்திருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அதேமுடிவை நடிகர் சூர்யாவும் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரரைப்போற்று படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த அருவா படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது.