சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று ஓடிடி மூலமாக மொத்தம் 200 நாடுகளில் வெளியாகிறது.

சூர்யா ரசிகர்கள் அவரது அடுத்த படங்கள் மீது தற்போது எதிர்பார்ப்பை திருப்பி இருக்கிறார்கள்.

ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்களில் சூர்யா அடுத்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் மற்றொரு படம் பற்றிய தகவலும் வேகமாக பரவி வருகிறது.

ஜெயம் ரவி நடித்த அடங்கமறு படத்தினை இயக்கிய கார்த்திக் தங்கவேல் உடன் சூர்யா ஒரு புதிய படத்திற்கான கூட்டணி சேர உள்ளார் என்று கூறப்படுகிறது.