சூர்யா பிறந்த நாளில் மாஸ் முக்கிய அறிவிப்பு..

நெடுமாறன் ராஜங்கம் என்ற கதாபாத் திரத்தில் சூராரைப் போற்று படத்தில் நடிக்கிறார் சூர்யா . பிரபல ஏர் டெக்கான் குழும நிறுவனர் கோபி நாத்தின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப் பட்டுள்ளது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார்.


சூரரைப்போற்று குழு சூர்யாவின் மரண மாஸ் போஸ்டர் ஒன்றை வெளி யிட்டுள்ளது. அத்துடன்,’சூர்யா அண்ணா பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி ஆச்சர்யமான அறிவிப்பு காத்திருக் கிறது’ என அறிவித் துள்ளது. உள்ளங்கையில் மாணவர்களை சூர்யா தாங்கிக்கொண்டு சிட்டிக்கு உயரத்தில் இருப்பது போல் புதிய போஸ்டர் வித்தியாமாக அமைக்கப்பட்டிருக் கிறது.
அநேகமாக சூர்யா பிறந்த நாளில் படத் தின் டிரெய்லர் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.