சூர்யா படம் இந்தியில் ரீமேக் ஆகிறது?

டிகர் சூர்யா நடித்து முடித்து திரைக்கு வர சென்சார் சான்றிதழ் பெற்று ரெடியாக இருக்கிறது சூரரைப்போற்று. சுதா கொங் கொரா இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.
விமான தொழில் அதிபர் ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை கதையாக இது உருவாகி இருக்கிறது.

இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்த வுடன் திரையிட திட்ட மிடப்பட்டிருக் கிறது.இதற்கிடையில் இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சு நடக்கிறது. விஜயதேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை சாஹித் கபூர் இந்தியில் ரீமேக் செய்து நடித்தார். அவரே சூரரைப்போற்று படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது.