சென்னை:

ரசு பள்ளிகளில் உபரியாக உள்ள  ஆசிரியைகளை அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி யுகேஜியை கவனிக்க தமிழக கல்வித்துறைமுடிவு  செய்து. இது ஆசிரியைகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் தேவைக்கு அதிகமாக ஆசிரியர், ஆசியைகள் இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வருகிறது. 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதால், உபரியாக உள்ள ஆசிரியைகளை வேறு பணிகளுக்கு மாற்றி வருகிறது தமிழக கல்வித்துறை.

ஏற்கனவே இதுபோல உபரியாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி யாற்றிய ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில்  பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உபரியாக உள்ள ஆசிரியர்களில், பெண் ஆசிரியைகளை மட்டும் தேர்வு செய்து அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கவனிக்கும் வகையில் பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை கல்விஅதிகாரி அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றிறிக்கைஅனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உபரி ஆசிரியைகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.