அதிர்ச்சி:  இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கவில்லை!

மீபகாலமாக, தினசரி பெட்ரோல், டீசல் விலை ஏறிவந்த நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 வருடங்களாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் வருடம் ஜூன் மாதம் மாற்றம் ஏற்பட்டது. அதாவது, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. இது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் நாளடைவில் இந்த அதிர்ச்சிக்கு மக்கள் பழகிவிட்டனர்.

“இன்று எவ்வளவு அதிகரித்திருக்கிறது” என்று இயல்பாக கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் இன்று பெட்ரோல் டீசல் விலை ஏறவில்லை. இதுவே மக்களுக்கு தலைகீழ் அதிர்ச்சியாக இருக்கிறது.

அதாவது, நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ. 77.43 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ. 69.56 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இன்று எந்தவித மாற்றமும் இன்றி அதே நிலை தொடர்கிறது.