மாவோயிஸ்டுகளுடன் ஒன்றாக அமர்ந்து ஹாக்கி போட்டியை ரசித்த ஒடிசா முதலர்வர்!

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி தொடரின் காலிறுதி போட்டியை அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் மாவோயிஸ்டுகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

naveen

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா உட்பட 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நேற்று காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்நிலையில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த ஒடிசாவில் மனம் திருந்தி வன்முறையை கைவிடுவோருக்கு அரசு உரிய உதவிகளை செய்து கொடுக்கும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால் அரசின் நடவடிக்கையை ஏற்று சில மாவோயிஸ்டுகள் சரணடைந்து வருகின்றனர்.

otisha

அதன் அடிப்படையில் இயல்பான வாழ்க்கையை விரும்புவதற்காக காவல்துறையினரிடம் சரணடைந்த 30 மாவோயிஸ்டுகள் உலகக் கோப்பை ஹாக்கி தொடரை காண விரும்பியதால் அவர்களுக்கு அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மனம் திருந்திய மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை ஏற்ற காவல்த்துறை அணிகாரிகள் ஹாக்கி போட்டியை காண ஏற்பாடு செய்தனர்.

நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய அணி பங்கேற்பதை காண ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக்கும் வருகை தந்தார். முதல்வர் நவீன் பட்னாயக்குடன் இணைந்து 16பெண்கள் உட்பட 30 மாவோயிஸ்டுகள் ஹாக்கி போட்டியை கண்டு ரசித்தனர். முதல்வருடன் அமர்ந்து போட்டியை ரசித்தது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம் என மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர்.

வன்முறையில் ஈடுபடும் மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்ந்த்து அவர்கள் மனம் திருந்தி சக மனிதர்களுடன் இணைந்து வாழ நடவடிக்கை எடுத்து வரும் ஒடிசா மாநில அரசிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.