ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு படம் சர்வைலன்ஸ் ஜோன் (Surveillance Zone) …..!

நூறு நிமிடங்கள் ஓடக்கூடிய சர்வைலன்ஸ் ஜோன் (Surveillance Zone) என்கிற படம் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்திற்குப் பின், இந்திய மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு படமாக அமைந்துள்ளது.

வெறும் 45,000 ரூபாய் பட்ஜெட்டுடன் எடுக்கப்பட்ட இப்படம் கனடாவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்டது. ஆனால் புதுமுக நடிகர்களை கொண்டு படம் எடுக்கப்பட்ட காரணத்தால், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

அதேநேரம் கைதி, ஓ மை கடவுளே, டிரான்ஸ் போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சி.சி.டி.வி கண்ணோட்டத்துடன் படமாக்கப்பட்ட உலகின் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள திரைப்படம் “Surveillance Zone”.

அகஸ்ட் 16ம் தேதி Toronto வில் நடந்த International Indian Film Festival இல் இப்படம் திரையிடப்பட்டது. இது வரை Italy, Berlin, Israel, Miami, Calcutta போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட சர்வ தேச திரைப்பட விழாக்களில் இந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல வரவேற்புகளும் கிடைத்துள்ளது. டில்லி யில் நடத்தப்பட்ட Dadasaheb Phalke International Film Festival இல் விருதும் கிடைத்துள்ளது.

ஒரு பரிசோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் இஃபால், குணா, ரகுராம் இரவிச்சந்திரன் ஆகியோர் சவுண்ட் டிசைன் செய்துள்ளனர்.