கூகுள் மேப்ஸ் நம்பத்தகுந்தவை அல்லை : சர்வே ஆஃப் இந்தியா

டில்லி

கூகுள் மேப்ஸ் துல்லியமானதாக இல்லாததால் நம்பத் தகுந்தவை அல்ல என சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.

சர்வே ஆஃப் இந்தியா நடத்திய ஒரு நிகழ்வில் சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் கலந்துக் கொண்டு பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது :

”கூகுள் மேப்புகள் அரசால் உருவாக்கப்பட்டவை அல்ல.   அதனால் அவை அரசால் அங்கீகரிக்கபடவில்லை.  மேலும் அவை துல்லியமானவையும் இல்லாததல் அதன் நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குரியது.

கூகுள் மேப் அரசால் தடை செய்யப்படவில்லை.  அதனை ஓட்டுனர்கள் பயன்படுத்துவதால் தவறில்லை.   ஆனால் இருப்புப்பாதை அமைப்பு, சாலை அமைப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் அவைகள் இல்லை.”

இவ்வாறு ராவ் கூறினார்.

ஆனால் அமெரிக்காவில் கூகுள் மேப் துல்லியமாக அனைத்து விவரங்களையும் தருவதால் அதை பயங்கரவாதிகள் உபயோகிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்திய சர்வே நிறுவனம் தனது மேப்புகளை அனைவரும் இலவசமாக பயன்படுத்த செய்யப் போகிறது என்றும் அதனால் துல்லியமான மேப்புகளை இணையத்தில் ஏற்றும் முயற்சி நடக்கிறது என்றும் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்