டில்லி:

வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான இண்டீட் நிறுவனம் இன்று ஒரு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி அமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல் ஐக்கிய பேரரசில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 42 சதவீதமாக கடந்த ஆண்டு குறைந்துள்ளது.

எனினும் ஐக்கிய பேரரசில் உள்ள ஜெர்மனி மற்றும் ஐயர்லாந்தில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஜெர்மனி 10 சதவீதத்துடனும், ஐயர்லாந்து 20 சதவீதத்துடனும் அதிகரிப்பில் உள்ளது. வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையும் சரிவை சந்தித்துள்ளது.

‘‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளது. நிதானமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்திய பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக அதிக திறன் படைத்த இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்த்து சொந்த நாட்டிலேயே காத்திருக்கின்றனர்’’ என்று இண்டீட் இந்தியா நிர்வாக இயக்குனர் சஷிகுமார் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் வேலை தேடும் ஐக்கிய பேரரசின் குடிமகன்கள் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 170 சதவீத வேலை தேடும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது. மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் போன்ற ஆக்கப்பூர்வ நடவடிக்கையால் இந்தியா வேலைவாய்ப்பு அளிக்கும் முணையமாக மாறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொழில் செய்வது எளிதாகியுள்ளது’’ என்றார் குமார்.

இந்தியர்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்று நினைக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 49 சதவீத இந்தியர்கள் மட்டுமே அங்கு வேலை தேடும் நிலைப்பாட்டில் உள்ளனர்.

இதர நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸில் 16 சதவீதமும், கனடாவில் 9 சதவீதமும், பிரிட்டனில் 5 சதவீதமும், சிங்கப்பூரில் 4 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 3 சதவீதமும், கத்தாரில் 2 சதவீதமும், தென்ஆப்ரிக்காவில் 1 சதவீதமும், பக்ரைனில் 1 சதவீதமும் வேலை தேடும் ஆர்வத்தில் இந்தியர்கள் உள்ளனர்.