சாதி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சூர்யாவின் “மண்ணுருண்ட மேல…” பாடல்….!

சாதி பிரிவினை, ஆணவக் கொலை போன்றவற்றுக்கு எதிரான படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆணவக் கொலையை ஆதரிக்கும் வகையிலும், சாதி இருக்கிறது, இருக்க வேண்டும், என்பதை வலியுறுத்தும் வகையிலும், சமீபத்தில் ஒரு படம் வெளியாகியது.

இந்த நிலையில் சாதி சர்ச்சையில் நடிகர் சூர்யாவும் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’ . இதில் இடம்பெறும் “மண்ணுருண்ட மேல…” என்று பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

என்னதான் சொத்து, பணம் இருந்தாலும், மனுஷனுக்கு இறுதியில் ஆறடி மண் தான் சொந்தம், என்ற கருத்தை வலியுறுத்தும் இப்பாடலில் மேல் சாதி, கீழ் சாதி பிரிவினை குறித்த வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதால், இப்பாடலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அதே சமயம், ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட், நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, சூர்யாவின் சூரரைப் போற்று, பாடலை வரவேற்றதோடு, அப்பாடலை பெரிய அளவில் வைரலாக்க வேண்டும், என்று கூறினார்.