மதம் மாறவில்லை!: சூர்யா விளக்கம்

சென்னை,

தான் இஸ்லாம் மதத்திற்கு மாறவில்லை என்று நடிகர் சூர்யா விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யா இஸ்லாமியர்கள் வழிபாட்டு தலத்தில் வழிபாடு செய்வது போன்ற காட்சிகளைக் கொண்ட வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து நடிகர் சூர்யா  விளக்கம் அளித்துள்ளார். அவர், “ஒரு புத்தகத்தின் மேலட்டையை வைத்து மட்டும் எப்படி அந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தை உணர முடியாதோ அது போல ஒரு வீடியோ காட்சியை மட்டும் வைத்து உண்மையை உணர முடியாது.

கடந்த 2013ல் படப்பிடிப்புக்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பா சென்றேன். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் தாயார் கேட்டுக்கொண்டதன்பேரில் அங்குள்ள அமீர் பீர் தர்காவுக்கு சென்றேன்.

அங்கு சில  நடந்த வழிபாடுகள்  சிலவற்றில் கலந்துகொண்டேன். இதை தவறாக புரிந்து கொண்ட சிலர் நான் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இஸ்லாம் மதம் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அதே நேரம், நான் அந்த மதத்திற்கு மாறவில்லை”  என்று சூர்யா  விளக்கம் அளித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: I am not changed the religion, Surya description, மதம் மாறவில்லை!: சூர்யா விளக்கம்
-=-