நிவாரண பணியில் சூர்யா ரசிகர்கள்.. ஆடியோ வெளியிட்டு அட்வைஸ்..

கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட் டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.


இதுகுறித்து சூர்யா ஆடியோவில் பேசி ரசிகர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார். அதில். ’நிவாரண உதவிகளை செய்து வரும் அனைத்து சகோதரர்களுக் கும் நன்றி. உண்மையில் வறுமையில் வாடும் கடைகோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடைந்தனவா என்பதை ஓரிரு முறை சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ரசிகர் உதவிகள் வழங்கும் படங்களுடன் கூடிய இந்த ஆடியோ பிளஸ் வீடியோவை சூர்யா ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.