2டி நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ’24’.

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது இப்படம் .

இந்நிலையில் “’24’ 2-ம் பாகம் உருவாகுமா?” எனும் கேள்விக்கு இயக்குநர் விக்ரம் குமார்

’24’ 2-ம் பாகத்துக்காக நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான பணிகள் போய்க் கொண்டிருக்கின்றன.

கதை முடிவானவுடன், சூர்யா சாருக்குப் பிடித்திருந்தது என்றால் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டியதுதான் என கூறியுள்ளார் .