இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா பணப்பிரச்சினையில் சிக்கி படத்தை வெளியிட முடியாத நிலையில் உள்ளது .இதே போன்று இவரது மற்றொரு படமான துருவ நட்சத்திரம் வெளியாவதிலும் தடைபட்டு வருகிறது.

இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது செய்தி வெளியாகி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, கவுதம் மேனன் – சூர்யா கூட்டணியில், காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.