‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில் சூர்யா , ஷாருக்கான் ரோல் என்ன…?

நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’படம் உருவாகியுள்ளது .

இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சிம்ரன் மற்றும் மாதவன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் நடிக்கின்றனர். தமிழில் நடிகர் சூர்யாவும், ஹிந்தியில் நடிகர் ஷாருக்கானும், நம்பி நாராயணனை பேட்டி எடுக்கும் நெறியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.