சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40 வது ஆண்டு விழாவில் சூர்யா புதிய கல்விக்கொள்கை, நுழைவு தேர்வு பற்றி பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது

எச்.ராஜா, தமிழிசை, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் கருத்தை வண்மையாக கண்டித்த நிலையில், சீமான் சூர்யாவுக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

அந்த வகையில் கல்விக்கொள்கை குறித்து பேசுவதற்கான உரிமை நடிகர் சூர்யாவிற்கு உண்டு என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் சூர்யாவுக்கு ஆதரவு கரம் நீட்டியிருந்தார்.

ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்ட வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கின்றது என கூறியிருந்தார் .

தனக்கு ஆதரவு அளித்த நடிகர் கமலஹாசனுக்கு சூர்யா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.