சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.

இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் ‘நானா தான வீணா போன…’ என்ற பாடலும் ‘சொடக்கு மேல…’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படம், தெலுங்கில் கேங் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இதன் டீசர் வெளியிடப்பட.. பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. அதாவது லட்சத்துக்கும் அதிகமான க்ளிக்ஸ்.

ஒரு டப்பிங் படத்துக்கு தெலுங்கு ரசிகர்கள் இத்தனை ஆதரவு அளித்ததில்லை என்று வியக்கிறது டோலிவுட்