நீதிபதி புகார்: வம்பை விலை கொடுத்து வாங்கிய நடிகர் சூர்யா..

வம்பை விலை கொடுத்து வாங்கிய நடிகர் சூர்யா..

சினிமாவில் ‘டயலாக்’ பேசுவது போல் ஆவேசமாக அறிக்கை வெளியிடுவது நடிகர் சூர்யாவின் பாணி.

நீட் விவகாரத்தில் சூரியா நேற்று வெளியிட்ட அறிக்கை அவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

‘’கொரோனா அச்சத்தால் உயிருக்குப் பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம்,மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’’ என்று தனது அறிக்கையில் சூரியா நீதிமன்றத்தை உரசி இருந்தார்.

இதையடுத்து சூரியா மீது, தாமாகவே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வர் பிரதாப் சகிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் நடிகர் சூரியாவை கண்டித்துள்ள நீதிபதி’சுப்பிரமணியம், சூரியாவின் அறிக்கை நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அச்சுறுத்தும் வகையில் உள்ளது’.’’என்று கூறியுள்ளார். சூரியா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதியே கடிதம் எழுதி இருப்பது, சூர்யாவுக்குச் சிக்கலை உருவாக்கி உள்ளது.

-பா.பாரதி.