2021ல் சுஷாந்த் சிங் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.. நடிகரின் தந்தை புது தகவல்..

டிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடந்த ஜூன் 14 தற்கொலை செய்து கொண் டார். அதற்கான காரணம் குறித்து நண்பர்கள், கேர்ள் பிரண்டிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
இந்நிலையில் சுஷாந்த் தந்தை ஒரு பேட்டியில் சுஷாந்த் திருமண திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.


சுஷாந்த் தான் நடித்து முடித்து நடிகர் திரைக்கு வரவிருக்கும் படம் வெளி யானதும் வரும் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். கொரோனா லாக்டவுனில் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்ப வில்லை. இந்த விஷயம்பற்றிதான் கடைசியாக என்னிடம் சுஷாந்த் பேசினார். பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் திருமணத்தைத் திட்டமிடு வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். முழு குடும்பமும் அவரது திருமணத் திற்கு தயாராகி வந்தது. அதற்காக குடும்பத்தினர் அனைவரும் மும்பைக்கு செல்ல திட்டமிட்டடிருந் தோம்’ என குறிப்பிட்டார்.
மேலும் சுஷாந்த் தந்தையிடம், ’நடிகை ரியா சக்ரவர்த்தி சுஷாந்தின் காதலியா?’ என்றபோது. ’அவரைப் பற்றி எதுவும் தெரியாது, சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா லோகண்டே தான் சுஷாந்தின் வாழ்க்கையில் தனக்குத் தெரிந்த ஒரே பெண்’ என்று கூறினார்.