சுஷாந்த் சிங் மரணம் அறிந்து உறவுக்கார பெண் அதிர்ச்சி மரணம்..

மும்பை வீட்டில் வசித்து வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இந்த தகவல் அவரது குடுபத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, குடும்பத்தினர் அனைவரும் பீகாரில் வசிக்கின்றனர். மும்பையில் சுஷாந்த் சிங் மட்டும் தனி வீடு எடுத்து தங்கி இருந்தார்.


சுஷாந்த் சிங் மரண செய்தி அறிந்ததிலிருந்து பீகாரில் வசிக்கும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் மனைவி சுதா தேவி என்பவர் அதிர்ச்சியில் இருந்தார். 2 நாட்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்தார். நேற்று சுஷாந்த் உடல் மும்பையில் தகனம் செய்யப்பட்டது என்பதை அறிந்ததும் மேலும் அதிர்ச்சியில் அடைந்தார், இதில் அவரது உயிர் பிரிந்தது.
சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டது திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சுஷாந்த் இறுதி சடங்கில் அவரது கேர்ள் ஃபிரண்ட் ரெயிஹா சக்ரபோர்த்தி மற்றும் நடிகை கீர்த்தி சனோன் உள்ளிட் பலர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

You may have missed