சுஷாந்த் அனுப்பிய கடைசி மெசேஜ் பற்றி பிரபல பத்திரிக்கையாளர் வெளியிட்ட பதிவு…..!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் சுஷாந்த் சிங் கடைசியாக தனக்கு அனுப்பிய மெசேஜை டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

“சுஷாந்த் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ். சார் நான் விரும்பிய அனைத்தும் நான் பெற்று விட்டேன். யாருடைய இருப்பு மற்றும் மறைவிற்காக எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேரம் பேச விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம்” என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.