ந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் சிங், மும்பையில் உள்ள வீட்டில் கடந்த ஜுன் மாதம் 14 ஆம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்த நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை யடுத்து மும்பை வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் அங்குள்ள விமானப்படைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் முகாம் அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சுஷாந்த் வீட்டு சமையல்காரர் நீரஜ், வீட்டு மேலாளர் சாமுவேல் ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் உதவியை, சி.பி.ஐ. .நாடியுள்ளது.

சுஷாந்த் மரணம் நிகழ்ந்தது எப்படி என்பதை இந்த நிபுணர்கள், தடவியல் சோதனை நடத்தி கண்டு பிடிப்பார்கள். ’’சி.பி.ஐ.அளிக்கும் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆராய்ந்து , சுஷாந்த் உடலில் காயங்கள் உள்ளதா? காயம் இருந்தால் எதனால் ஏற்பட்டது?’ என ஆராய்ந்து சி.பி.ஐ.யிடம் விவரங்கள் தெரிவிக்கப்படும்’ என எய்ம்ஸ் தடயவியல் நிபுணர்கள் குழுவின் தலைமை டாக்டர் குப்தா தெரிவித்தார்.

-பா.பாரதி.