சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வரும் #BoycottKhans ஹாஷ்டேக்….!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.

சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆலியா பட், சோனம் கபூர், சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #BoycottKhans என்ற ஹாஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.