வலியில்லாத மரணம்… சுஷாந்த் சிங் கடைசி நேரத்தில் கூகுளில் தேடிய வார்த்தை….!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் பாட்னா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் சுஷாந்த் கடைசியாக கூகுளில் தேடிய வார்த்தைகள் என்னென்ன என்பது குறித்து மும்பை காவல்துறை தகவல் கூறியுள்ளது. கூகுளில் தனது பெயரில் என்னென்ன செய்திகள் வெளியாகியுள்ளன என்று தேடியிருக்கும் சுஷாந்த், வலியில்லா மரணம் (Painless Death) இருதுருவ நோய் என்கிற மனநலக் குறைபாடு ( Bipolar Disorder) மனச்சிதைவு ஆகிய வார்த்தைகளையும் கூகுளில் தேடியுள்ளார். இத்தகவலை மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான வழக்கில், இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், அதில் சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் 2 முறை வாக்குமூலம் பெற்றிருப்பதாகவும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் தெரிவித்துள்ளார்.