நடிகர் சுஷாந்துக்கு கஞ்சா பழக்கம் உண்டு : காதலி ரியா நீதிமன்றத்தில் ஒப்புதல்.. 

நடிகர் சுஷாந்துக்கு கஞ்சா பழக்கம் உண்டு : காதலி ரியா நீதிமன்றத்தில் ஒப்புதல்.. 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை மும்பை போலீஸ், சி..பி.ஐ.,அமலாக்கத்துறை, மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு என நான்கு அமைப்புகள் தனித்தனியாக விசாரித்து வருகின்றன.

சுஷாந்துக்கு போதைப்பொருள் வழக்கம் உண்டு எனக் கூறி இருந்த அவரது காதலி ரியாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஜாமீன் கேட்டு பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள ரியா, ‘’ என் மீது வழக்கு தொடர, சி.பி.ஐ.க்கும், அமலாக்கத்துறைக்கும் உரிய ஆதாரங்கள் இல்லாததால் போதைப்பொருள் பிரிவைப் பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘’சுஷாந்த் எனக்கு அறிமுகம் ஆகும் முன்பே அவருக்குக் கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்தது’’ என்று கூறியுள்ள ரியா, சில நேரங்களில் சுஷாந்த் போதைப்பொருள் வாங்க உதவி செய்துள்ளேன்’ என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

-பா.பாரதி.