ரஹ்மான் இசையில் சுஷாந்த் சிங் ’தாரே ஜின்’ பாடல் நாளை வெளியீடு..

ற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சுங் ராஜ்புத்தின், ‘தில் பெச்சாரா’ படத்திலிருந்து ‘தாரே ஜின்’ என்ற காதல் பாடல் நாளை (15ம் தேதி) வெளியாகிறது. இப்பாடலில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி ஆகியோர் நடித்துள்ளனர். இதை மோஹித் சவுகான் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


’தில் பெச்சாராவின்’ இயக்குனர் முகேஷ் சாப்ரா பாடல் பற்றி கூறும்போது, “நீங்கள் ஒரு காதல் பாடல் இல்லாமல் ஒரு காதல் கதையை உருவாக்க முடியாது. இசை ஒரு காதல் கதையின் மிக முக்கியமான பகுதியாகும், மேலும் இந்த பாடல் படமாக்கள் மிகவும் எளிமையானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கல்லூரி இசை விருந்து மாலைபொழுதின் ஒரு பகுதியாக இது படமாக்கப்பட்டிருக்கிறது’ என்றார்.

முன்னதாக தில் பெச்சாராவின் தலைப்பு பாடலை வெளியிட்டப்பட்டது. இந்த பாடலுக்கு ஃபரா கான் நடனமாடியுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். அமிதாப் பட்டாச்சார்யா அதன் பாடல் வரிகளை எழுதினார்.