ராணா, ரகுல் பிரித்தை சுஷாந்த் காதலி தொடர்பு கொண்டது ஏன்?

றைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு தொடர் பாக ரியா சக்ரவர்த்தியை சிபிஐ மற்றும் அமலாக்க துறையும் விசாரித்து வருகின்றன.


இந்த விசாரணையின்போது ரியா பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பாகுபலி நடிகர் ராணா ஆகியோரை சமீபத்திய வாரங்களில் பல முறை அழைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ரியா சமீபத்தில் யார் யாரிடம் பேசி உள்ளார் என்று அதற்கான அழைப்பு பட்டியலை பார்த்தபோது இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
ரகுலை ரியா 30 முறை அழைத்திருக்கிறார். அதேபோல் ரகுல் ரியாவை 14 முறை அழைத்தார் என்றும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகர் ராணாவை ஏழுமுறை ரியா அழைத்திருக்கிறார். ஆமீர் கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலரையும் ரியா அழைத்திருக்கிறார். ரியா போனில் அழைத்தபோது அந்த அழைப்புகளை ஆமிர்கான் ஏற்கவில்லை. ஆனால் பின்னர் மூன்று முறை எஸ்.எம்.எஸ் பேசி இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கு நடந்துகொண்டிருக்கும் போது பிற நடிகர், நடிகைகளை ரியா எதற்க்கு அழைத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது,