அங்கிதாவை விசாரிக்குமாறு சுஷாந்த் ரசிகர்கள் மும்பை போலீசாரிடம் வலியுறுத்தல்….!

மும்பையில் பாந்த்ரா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த இரண்டு மாதங்களாக இவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதன் காரணமாகவே இவர் தற்கொலை செய்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருடன் பவித்ரா ரிஷ்தா என்ற டிவி தொடரில் நடித்த அங்கிதா லொக்ஹண்டேவுக்கு விக்கி ஜெயின் என்பவருடன் சில நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுஷாந்த் – சிங் அங்கிதா ஜோடி 2016-ம் ஆண்டு வரை காதலித்து வந்ததாக பாலிவுட் சினிமா தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண செய்தியை அறிந்து அங்கிதா தனது சமூகவலைதள பக்கத்தில் “உங்களுடைய வாழ்கையிலிருந்து சிலரை கடவுள் நீக்கிவிடுவார். காரணம், நீங்கள் கேட்காத உரையாடல்களை அவர் கேட்டிருப்பார்..” என்று பதிவிட்டிருந்ததாகவும், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மும்பை போலீசாரை டேக் செய்து அங்கிதாவை விசாரிக்குமாறு ரசிகர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.