Random image

பாகிஸ்தான்: கர்தார்பூர் வழித்தடம் திறக்க விரைவில் சுஸ்மா கடிதம்…..சித்து தகவல்

சண்டிகர்:

பாகிஸ்தான் நாட்டின் கர்தார்பூரில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு சீக்கியர் சென்று வரும் வகையில் வழித்தடம் திறப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுத சுஸ்மா சுவராஜ் உறுதி அளித்திருப்பதாக சித்து தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவிஏற்ற விழாவில் பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் கலந்துகொண்டார். அப்போது ராணுவ அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அங்கு கார்தார்ப்பூரி, உள்ள சீக்கிய புனித ஸ்தலத்துக்கு சீக்கியர்கள் சென்று வர வழித்தடத்தை திறந்துவிடும் வகையிலான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சுஸ்மா சுவராஜை, சித்து நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது கர்த்தார்ப்பூர் விவகாரம் தொடர்பாக விரைவில் பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதுவதாக அவர் உறுதியளித்ததாக சித்து தெரிவித்தார்.

இதற்கிடையில் மத்திய அமைச்ச் ஹர்சிம்ரத் கூறுகையில்,‘‘ பஞ்சாப் அமைச்சர் சித்து முன் அறிவிப்பு இன்றி சுஸ்மா சுவராஜை சந்தித்து பேசியுள்ளார். ஆனால், கர்த்தார்பூர் விவகாரம் ஏற்கனவே என்னால் முன்னெடுத்து செல்லப்பட்டு வருகிறது’’ என்றார்.

இது குறித்து சித்து மேலும் கூறுகையில்,‘‘சுஸ்மா சுவராஜை சந்திக்க ஏற்கனவே முன் அனுமதி பெறப்பட்டது. இதை வைத்து நான் அரசியல் செய்யவில்லை. கடித வரைவு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அது விரைவில் பாகிஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இந்த பிரச்னையை நீண்ட நாட்களாக கையாளும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.கில்லும் உடன் இருந்தார்’’ என்றார்.